இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜாக்கீர் நாயக்கிற்கு மலேசியா சிவப்புக் கம்பளம் விரிக்குமா?, குலா கேள்வி!

-மு. குலசேகரன், நவம்பர் 20, 2016.

 

kulaunilateralconversionசர்ச்சைக்குறிய மத போதகரான ஜாக்கீர் நாயக், தலைமையேற்றிருந்த  இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்திற்கு இந்திய அரசாங்கம் சட்டவிரோத இயக்கனமென கூறி  5 வருடத்திற்கு தடை விதித்துள்ளது. இதன் வழி அவரின் நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டன. மதத்துவேஷம், இளைஞர்களுக்கு வன்முறைப்  போதிப்பது, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கீழறுக்கும் வண்ணம் பிரச்சாரம் செய்வது போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் அவரின் அறவாரியத்தை  தடை செய்துள்ளது.

 

அவர் மீது சில குற்றங்களும்  மும்பாய் போலீசாரால்   பதிவு செய்யப்பட்டுள்ளன . வாய்ச்சவடாலும், தான் மட்டுமே சிறந்த பேச்சாளன் என்ற திமிறில் பேசி வந்த ஜாக்கீர் நாயக் இப்பொழுது எந்த நேரத்திலும்  போலீசாரால்  கைது சேய்யப்படுவோம் என்ற அச்சத்தில்  இந்தியாவிற்கு வராமல் வெளி நாடுகளிலிலேயே இருந்து வருகிறார். அவரின் தந்தையின் இறப்புக்குக்கூட இந்தியவிற்கு வரவில்லை என்கின்ற செய்தி இதற்கு  மேலும் வலு சேர்க்கின்றது. மேலும் கனடாவிலும்., இங்கிலாந்திலும் ஏற்கனவே தடை செய்யப்பட மனிதர் ஜாக்கீர் நாயக்.

 

கடந்த வருடம் ஜாக்கீர் நாயக்கை மலேசிய அரசாங்கம் சிவப்புக் கம்பள வரவேற்புக்கு இணையாக வரவேற்று  உபசரித்து அவருக்குdr-zakir-naik அணுசரணை செய்தது. பல அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் அவருக்கெதிராக  குரல் கொடுத்தும் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது. மாறாக, அவருக்கு கெஞ்சிர் ஏரியில்  மூன்று   தீவுகளை  இலவசமாக கொடுத்து அவரின் நடவடிகைகளை  சுதந்திரமாகவும் மேலும் விரிவாகச் செய்யவும் திரங்கானு அரசாங்கம் முன்வந்தது.

 

இவ்வளவு சர்ச்சைக்குறிய ஒரு மனிதரை மலேசிய அரசாங்கம் இன்னும் தனது முக்கியமான வேண்டப்பட்ட   பிரமுகர்கள்  பட்டியலில் வைத்திருக்கின்றதா அல்லது அவரை  இந்திய அரசாங்கம்  செய்ததைப்போல தடை விதிக்கப் போகிறதா?  ஒரு வேளை மலேசியா தனது  நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல்  இருக்குமேயானால் அதன் விளைவாக மலேசியா-இந்தியா இடையிலானா ராஜதந்திர உறவுகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டா? அப்படி ஜாக்கீர் நாயக் அடைக்கலம் கோரி மலேசியா வந்தால் அரசாங்கம் அதனை  ஏற்குமா? இது போன்ற கேள்விகளுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

 

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு  தடை விதித்த மலேசியா அதற்கான காரணமாக,  ஐக்கிய நாட்டு (ஐ.நா)  சபையின் முடிவை சுட்டிக்காட்டியது. இப்பொழுது ஐ.நாவும் புலிகளுக்கெதிரான தடையை  நீக்கிவிட்டது. ஆனால் மலேசியாவோ இன்னும் அந்த தடையை  நீக்கவில்லை. புலிகள் தங்களில் இன மீட்புப் போராட்டத்திற்காக ஸ்ரீலங்காவில் ஆயுதம் ஏந்தினார்கள். அது அவர்களின் உரிமைப் போராட்டம். அவர்கள் மற்ற நாடுகளில் வன்முறையோ அல்லது அந்த நாட்டின் இறையாண்மைக்கு  எதிராக  எந்த ஒரு  நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் மலேசிய அரசாங்கம் அவ்வியக்கத்தை தடை செய்தது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் கைகோர்த்து விடுதலைப் புலிகள் எனச் சந்தேகப்படும் தமிழர்களை ஸ்ரீலங்காவிடம் ஒப்படைத்தது. இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கெதிராக மலேசிய அரசாங்கம் செயல்பட்டது. அதனால், இங்கு வசிக்கும் ஒட்டு மொத்த இந்தியர்களின் வெறுப்பையும்  சம்பாதித்துக் கொண்டது.  ஆனால்  ஜாக்கீர் நாயக், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக முழுவதும் தனது தொலைக்காட்சி சேனலான “அமைதி“ (பீஸ்) டிவியின் வழி அமைதியைத் தவிற மற்ற எல்லாவற்றையும் போதிக்கின்றார்.

 

zakilஅப்படிபட்ட சர்ச்சைக்குறிய மனிதருக்கு மலேசிய அரசாங்கம் ராஜமரியாதை கொடுத்து  உபசரித்தது. இப்பொழுது ஜாக்கீர் நாயக்கின் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக  இந்தியாவில் தடை செய்யப்படுவிட்டன. மலேசியா எப்பொழுது தனது நடவடிக்கையாக  அந்த சர்ச்சைக்குறிய மதப் போதகற்கு தடை விதிக்கப்போகிறது?

 

கடந்த ஜூலை 1 ஆம் தேதி டாக்காவில் ரோஹான் இம்தியாஜ் (Rohan Imtiaz) என்கின்ற வங்காளத் தேசத்தவன்  நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு ஜாக்கீர் நாயக்கின் பிரச்சாரம் தான் தனக்கு  உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளதை மலேசிய அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகள்  மலேசியாவில் நடவாமல் இருக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இருக்க  வேண்டும். முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக மாறவேண்டும் என்று  வலியுறுத்தி வரும் ஜாக்கீர் நாயக் மலேசியா வருவதற்கு  தடை விதிக்கப்பட வேண்டும். மலேசியா மிதவாதம் கொண்ட நாடு என்று பறைசாற்றிக் கொள்ளும்  அரசாங்கம் செயல் வழி அதனை  நிரூபிக்கவேண்டும். பேச்சு ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல் உடனடியாக  ஜாக்கீர் நாயக் மலேசியவிற்குள்  நுழைய அனுமதியில்லாத மனிதர் என்று பிரகடனப்படுத்தவேண்டும்.

 

மலேசிய அரசாங்கம் இதனைச் செய்ய வேண்டும். செய்யுமா?