பேர்சே 5 பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் சீனர்கள். அவர்கள் டிஎபி ஆதரவாளர்கள். இது மகாதிராலும் அவரது ஆதரவாளர்களாலும் மலாய்க்காரர்களை அதிகம் கவர முடியவில்லை என்பதைக் காட்டுகிறது என்று அம்னோ நாளிழதான உத்துசான் மலேசியா கூறுகிறது.
பெர்செ 4 க்கிற்கு வந்திருந்தவர்களை விட பெர்சே 5 இல் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தது.
பெர்சேயை நிராகரிப்பதில் மக்கள் முதிர்ச்சியைக் காட்டியுள்ளனார். “பாராட்டுகள், பாராட்டுகள், பாராட்டுகள்” என்று இன்றைய உத்துசான் மலேசியா கூறுகிறது.
அட மட சாம்பிராணி utusan பெர்சே 5 அனைத்து மலேசியர்களையும் உள்ளடக்கியது என்று புரியவில்லையா ? வீண் தம்பட்டம் அடித்த சிவப்பு சட்டை மஞ்சள் கடலில் கரைந்து போனதை பார்க்கவில்லையா ? நஜிப் புகழ வேண்டும் என்பதற்க்காக பொய் பேச வேண்டாம் UTUTSAN .
பக்கத்தானுக்கு என்னுடைய அறிவுரை ……….. பாஸ் கட்சி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியாது . அமனாவை வைத்து கொண்டு ஊறுகாய் கூட போடா முடியாது
உத்துசான்! இப்படி ஒரு செய்தியைப் போட்டதற்கு உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்!
இம்முறை பெர்சே 5 பேரணியில் கலந்து கொண்டவர்களில் 35% மலாய்க்காரர்கள் என்பதே பெர்சே 5 பேரணிக்கு மாபெரும் வெற்றி. அதிலும் அம்னோ உறுப்பினர்கள் மஞ்சள் சட்டை அணிந்து பேர்சே 5 பேரணியில் கலந்து கொண்டது உத்துசான், அம்னோ மட்டுமல்ல பாஸையும் அதிர வைத்துள்ளது என்பதுதான் உண்மை.