2050 தேசிய உருமாற்றம் கொள்கை (டிஎன்50) 2020 தூர நோக்குக்கு மாற்றானது அல்ல என்று இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
பிரதமர் நஜிப் ரசாக்கின் சிந்தனைப்படி டிஎன்50 இன் முதல் கட்டம் எதிர்கால மலேசியாவைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக்கொள்ள வகைசெய்கிறது என்றாரவர்.
இன்றைய இளைஞர்கள் 2050 இல் மலேசியாவின் தலைவர்களாக இருப்பார்கள். டிஎன்50 ஐ வழிநடத்துவதில் அவர்கள் மிக முக்கியமான பங்காளிகளாக இருப்பார்கள்.
டிஎன்50 தூரநோக்கு 2020 ஐ அழித்துவிடுவதற்கு என்று சிலர் கூறுகின்றனர். இல்லை. 2020 தூர நோக்கு 2020 ஆம் ஆண்டில் முடிவிற்கு வரும்.
அதற்குப் பிறகு அடுத்த 30 ஆண்டுகளுக்கு நாம் வேறொரு தூர நோக்கை பெற்றிருக்க முடியாது என்பதல்ல என்று கைரி மேலும் கூறினார்.
அமைச்சரவையின் மிக இளம் வயது உறுப்பினரான கைரி டிஎன்50 குறித்த விவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவராக இருக்கிறார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் நஜிப் டிஎன்50 நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். அதன் பின்னர், டிஎன்50 பற்றிய விவாதம் நாடுதழுவிய அளவில் நடைபெறும் என்று கைரி தெரிவித்தார்.