ஸாகிட்: ஏன் மரியா சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கு ஐஜிபியையும் எஜியையும் கேளுங்கள்

 

ZahidaskAGபெர்சே 5 பேரணி நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதா க   பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா அவரது பெர்சே அலுவலகத்தில் போலீசார் மேற்கொண்ட ஒரு திடீர் சோதனையின் போது தண்டனை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் கீழ் அவரை நீதிமன்ற அனுமதியுடன் 28 நாட்கள் வரையில் தடுத்து வைக்க முடியும்.

மரியாவுக்கு எதிராக ஏன் சோஸ்மா சட்டம் பயன்படுத்தப்பட்டது என்று துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் அக்கேள்வியை போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் சட்டத்துறை தலைவர் (எஜி) ஆகியோரிடம் கேட்க வேண்டும் என்று இன்று கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“அவர்களுடைய செயல் நடவடிக்கை விவாகாரங்களை நான் தொட விரும்பவில்லை”, என்றாரவர்.