பெர்சே கைது: எண்மர் விடுவிக்கப்பட்டனர்; மரியா தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

 

Eightreleasedகடந்த வெள்ளிக்கிழை பெர்சேயிக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட கடுமமையான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் எண்மர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள்: ஸாப்வான் அனாங், மன்டீப் சிங், முகமட் லூக்மான் நுல் ஹாகிம் ஸுல் ரஸாலி, எஸ். அருட்ச்செல்வன், வோங் சீ வாய், லீ காய் மிங், அனிஸ் ஸியாபிகா மற்றும் ரோனி லியு.

பெர்சே தலைவர் மரியா சின் விடுவிக்கப்படவில்லை. மரியா சோஸ்மா சட்டம் 2012 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்குரைஞர் அம்பிகா கூறினார்.

தாங்கள் மரியாவை சந்தித்தாக கூறிய அம்பிகா, அவர் தனிப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், தமது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இது மீண்டும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் போல் தோன்றுகிறது என்றாரவர்.

சிறந்ததோர் மலேசியாவுக்காக தொடந்து போராட்டிக் கொண்டிருப்போம் என்று மரியா கூறியதாக அம்பிகா தெரிவித்தார்.

மரியாவை நீதிபதியின்முன் கொண்டுவருவதற்கான ஆட்கொணர்வு மனு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அம்பிகா தெரிவித்தார்.