எம்பி: மரியா பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டது ஏன்? விளக்கமளிப்பது ஜாஹிட்டின் கடமை

mpபெர்சே   தலைவர்    மரியா   சின்   அப்துல்லாமீது   கொடூர  பாதுகாப்புக்  குற்றச்  சட்டம்(சோஸ்மா)  2012  பயன்படுத்தப்பட்டிருப்பது   குறித்து  விளக்கமளிக்க    மறுக்கும்   உள்துறை   அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியை   எதிரணி   எம்பி   ஒருவர்   சாடினார்.

ஜாஹிட்   நேற்று,   உயர்நிலை  பாதுகாப்பு   மிரட்டல்களுக்கு  எதிராக   பயன்படுத்துவதற்காகக்  கொண்டுவரப்பட்ட   அக்கொடூரச்   சட்டம்   மரியாவைத்   தடுத்து  வைக்கப்   பயன்படுத்தப்பட்டது   ஏன்    என்ற  கேள்விக்குப்   பதிலளிக்காது   அது    “செயல்முறை  விவகாரம்”   பற்றிய   கேள்வி    என்றும்    சட்டத்துறைத்    தலைவர் (ஏஜி)  அல்லது   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்   போலீஸிடம்தான்   அதைக்   கேட்க   வேண்டும்   என்றும்  கூறிவிட்டார்.

“ஜாஹிட்   அதை  ‘செயல்முறை    விவகாரம்’   என்று   கூறி    விளக்கமளிப்பைத்   தவிர்க்க  முனைவது  பொறுப்பின்மையாகும்.

“போலீஸ்  படையின்   எல்லா   நடவடிக்கைகளுக்கும்,  செயல்முறை  விவகாரங்கள்  உள்பட,    உள்துறை  அமைச்சர்தான்  பொறுப்பு.

“உள்துறை  அமைச்சரிடம்   விளக்கம்   கேட்கும்   அதிகாரம்   நமக்குண்டு.  பதில்  சொல்லும்  கடப்பாடு   அவருக்கு  உண்டு”,  என  பாடாங்  செராய்   எம்பி   என்.சுரேந்திரன்   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.