மரியாவை விடுவிக்கக் கோரி எம்பிகள் புக்கிட் அமானுக்குப் படையெடுப்பு

mpசுமார்  40  எதிரணி     எம்பிகள்,   சோஸ்மா   சட்டத்தின்கீழ்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவை   விடுவிக்கக்  கோரி     புக்கிட்   அமான்  போலீஸ்  தலைமையகம்  நோக்கி   இன்று  ஊர்வலம்  சென்றனர்.

நாடாளுமன்ற  நுழைவாயிலிலிருந்து  புக்கிட்   அமான்வரை   ‘Bebaskan Maria’ (மரியாவை  விடுதலை  செய்), ‘Hentikan Sosma’ (சோஸ்மாவை   நிறுத்து) ‘Hidup Bersih’ (வாழ்க   பெர்சே)   என்று  முழக்கமிட்டவாறே   அவர்கள்   நடந்து   சென்றனர்.

செம்பூர்னா  எம்பியும்  பார்டி   வாரிசான்   சாபா   தலைவருமான   ஷாபி   அப்டால்,  பாகோ   எம்பியும்   பிரிபூமி  பெர்சத்து   மலேசியா   தலைவருமான   முகைதின்   யாசின்,   எதிரணித்   தலைவரும்   பிகேஆர்   தலைவருமான   டாக்டர்    வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  பிகேஆரின்  பத்து  எம்பி   தியான்   சுவா,   டிஏபி   சிபூத்தே   எம்பி   தெரேசா  கொக்,  கேலாங்  பாத்தா   எம்பி   லிம்  கிட்  சியாங்,    பாஸின்   பொக்கோக்  சேனா  எம்பி   மாபுஸ்  ஒமார்,  அமனாவின்  சிப்பாங்   எம்பி   ஹனிபா   மைடின்,  அமனாவின்  கோத்தா   ராஜா  எம்பி   டாக்டர்  சித்தி   மரியா  முகம்மட்   முதலானோரும்     அதில்  கலந்து  கொண்டார்கள்.