தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்) ஒரு சட்டவிரோத அமைப்பு என்று உள்துறை அமைச்சு அறிவித்திருப்பதை இரத்துச் செய்யும் முயற்சியில் பினாங்கு அரசு தோல்வி கண்டது.
பினாங்கு அரசு செய்து கொண்ட மனுவைத் தள்ளுபடி செய்த பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஹதாரியா சைட் இஸ்மாயில் பிபிஎஸ் ஒரு கழகம் என்று குறிப்பிட்டார்.
கழகம் என்றால் ஊராட்சி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் ஆனால் பிபிஎஸ் பதிவு செய்யப்படவில்லை.
“ஒரு கழகம் பதிவு செய்யப்படவில்லை என்றால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதப்படும்”, என நீதிபதி கூறினார்.