மரியா தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பினாங்கு சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம்

bersihபினாங்கு  முதலமைச்சர்   லிம்  குவான்   எங்,     பாதுகாப்புக்  குற்ற (சிறப்பு  நடவடிக்கை)ச்  சட்டத்தையும்   அதன்கீழ்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதையும்   கண்டிக்கும்   தீர்மானம்  ஒன்றை   பினாங்கு   சட்டமன்றத்தில்   தாக்கல்   செய்தார்.

மூன்று  பிள்ளைகளுக்குத்   தாயாரான   மரியா  ஒரு பயங்கரவாதியோ   அரசியல்வாதியோ   அல்ல    என்று  லிம்  குறிப்பிட்டார்.  மரியா  தாம்   தடுத்து  வைக்கப்பட்டிருப்பதை    எதிர்த்தும்   உடனடியாக    விடுதலை   செய்ய   வேண்டும்   என்று  கோரியும்   habeas corpus (ஆள்கொணர்)  மனு  ஒன்றை  இன்று   நீதிமன்றத்தில்    தாக்கல்    செய்துள்ளார்.

மரியா  விசாரணையின்றி  28   நாள்களுக்கு    சன்னல்  இல்லாத  அறையில்   தனித்து   அடைத்து  வைக்கப்பட்டிருப்பதை   மாநிலச்   சட்டமன்றமும்   கண்டிக்க   வேண்டும்    என  லிம்  வலியுறுத்தினார்.