மரியாவை ஒருநீதிபதியின் முன்கொண்டுவரக் கோரும் ஆட்கொணர் மனு தாக்கல் செய்யப்பட்டது

 

Mariafileshcorpsசோஸ்மா சட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் தம்மை நீதிபதியின்முன் நிறுத்தக் கோரும் ஆட்கொணர் (Habeas-corpus) மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவரை ஒரு நீதிபதி அல்லது நீதிமன்றத்தின்முன் கொணர்ந்து அவர் உண்மையிலேயே சிறையிலடைக்கப்பட வேண்டியவரா என்பதை நிர்ணயிப்பதற்காக பிறப்பிக்கப்படுவது ஆட்கொணர் கட்டளை.

இம்மனுவை தாக்கல் செய்த தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் (ஹாகாம்) அம்பிகாவுடன் இதர வழக்குரைஞர்களும் மரியாவின் மூன்று மகன்களும் உடனிருந்தனர்.