அரசாங்கம் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012ஐ (சோஸ்மா) தவறாகப் பயன்படுத்தாது என்று வாக்குறுதி அளித்திருந்தது. பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை அச்சட்டத்தின் கீழ் கைது செய்ததின் மூலம் அரசாங்கம் அந்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார்.
“அந்த எழுத்து மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை அந்தச் சட்டத்தைப் பிரகடனம் செய்த அதே அரசாங்கம் புறக்கணித்துவிட்டது”, என்று பெர்தானா தலைமைத்துவ அறவாரியத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.
அன்று சட்ட அமைச்சராக செயல்பட்ட நஸ்ரி அசிஸ் சோஸ்மா சட்டத்தின் கீழ் எவரும் அவர்களுடைய அரசியல் கொள்கைக்காக அல்லது செயல்களுக்காக மட்டும் கைது செய்யப்படவோ தடுத்துவைக்கப்படவோ மாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் 2012 ஆண்டில் உறுதியளித்திருந்தார் என்பதை மகாதிர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இப்போது அரசாங்கம் அச்சட்டைத்தை தவறாகப் பயன்படுத்தி எந்தக் குற்றமும் புரியாத மரியாவை தனி அறைச் சிறையில் அடைத்திருக்கிறது என்று மகாதிர் மேலும் கூறினார்.
எல்லாமே நீ சொல்லிக்கொடுத்த பாடம் தானேடா.
உங்கள் ஆட்சி காலத்தில் தேச நிந்தனை சட்டம் ஐ அஸ் எ அமல்படுத்தியது மறந்துவிட்டிரா ககாகதிரே? நீங்கள் தொடங்கிய ஆட்டம் இன்று வரை தொடர்கதை.
நீங்கள் அம்னோபுத்ராவாக இருந்திருந்தால் ஆதரித்து இருப்பீர்கள் என்ன செய்வது பிரிபூமிபுத்ராவாக இருப்பதால் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை.