ஹாடியின் மசோதா இவ்வாரம் தாக்கல் செய்யப்படும், ஸாகிட் கூறுகிறார்

 

Hadisbillஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) திருத்தம் செய்வதற்கான மசோதா நாளை அல்லது வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.

இச்சட்ட திருத்த மசோதாவை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்திருந்தார். இத்திருத்தங்கள் ஷரியா நீதிமன்றம் வழங்கும் தண்டனையை அதிகப்படுத்தப்படுவதற்கு வகைசெய்கின்றன..

இத்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை கிளந்தானில் ஹூடுட் சட்டம் வருவதற்கு வழி வகுக்கும் என்றாரவர்.

இவ்விவகாரம் குறித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடத்திய ஒரு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஸாகிட், “அது இவ்வாரம் தாக்கல் செய்யப்படும்” என்றார்.