டாக்டர் மகாதிர் முகம்மட் தம்மை இதுகாறும் குறைகூறி வந்துள்ள லிம் கிட் சியாங்குடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்டிருப்பது அரசியல் ‘பல்டி- அடிப்பு’க்கு நல்ல எடுத்துக்காட்டு என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார்.
பாதுகாப்புக் குற்றச் சட்டம் பயன்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் லிம் கிட் சியாங் அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை “பல்டி-அடிப்பு மன்னர்” என்று குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக ரஹ்மான் இவ்வாறு கூறினார்.
“பல்டி மன்னர்” என்ற பட்டம் டிஏபி தலைவருக்குத்தான் மிகவும் பொருத்தமானது. ஏனென்றால் அவர்தான் பல்லாண்டுகளாக பகைமை பாராட்டி வந்த முன்னாள் பிரதமருடன் இப்போது கூடிக் குலாவுகிறார்.
“மிக மோசமான ஊழல் பிஎம் என்று சொல்லி வந்தீர்களே அந்த துன் எம்-முடன் புதிதாகக் கூடிக் குலாவும் உங்களுக்குத்தான் அந்தப் பட்டம் முழுக்க முழுக்க உரியது”, என ரஹ்மான் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்ததின் நோக்கம், அவரவர் தத்தம் கடமையை செய்வதற்காக ! இப்படி வெந்ததைத்தின்று கண்டதை சொல்வதற்காக அல்ல !