சோஸ்மா சட்டத்தின் கீழ் பெர்சே தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் நோக்கம் அல்லது சமீபத்தில் நடத்தப்பட்ட பேரணி காரணமல்ல என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் கூறினார்.
இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட “குழப்பம்” களையப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சேயின் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்திய போது அங்கு காணப்பட்ட “ஆவணங்கள்” அடிப்படையில் மரியா கைது செய்யப்பட்டார் என்றார்.
ஆனால், அந்த ஆவணங்கள் பற்றி விளக்கம் அளிக்க அவர் மறுத்து விட்டார்.
“அவரை தண்டணை சட்டத் தொகுப்பு செக்சன் 124C இன் கீழ் விசாரிக்க எங்களுக்குப் போதுமான காரணங்கள் இருந்தன. ஆகவே, நாங்கள் அவரை கைது செய்தோம்.
“நாங்கள் அவரை கைது செய்தோம். விசாரனை நடைமுறை சோஸ்மாவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அக்கைதுக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை, பெர்சே 5 க்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அது (கைது) தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய மருட்டல் சம்பந்தப்பட்டது”, என்று காலிட் விளக்கம் அளித்தார்.