மரியாவின் “ஆட்கொணர்” மனு செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது

 

Mariashaebeuscorpusஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர் மனுவை செவிமடுக்கும்.

நீதிபரிபாலன ஆணையர் நோர்டின் ஹசான் அவரது அறையில் இந்த முடிவைச் செய்தார். இதற்கு முன்னர் போலீஸ் அதிகாரி தாம் லாய் குவான் மரியாவின் மகன் அஸுமின் முகமட் யுனூஸ் தாக்கல் செய்துள்ள சத்தியப் பிரமாணத்திற்கு பதில் அளிக்க போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி), உள்துறை அமைச்சர் மற்று அரசாங்கம் ஆகியோருக்கு ஏழு நாள் அவகாசம் அளிக்கும்படி செய்திருந்த மனுவை ஆணையர் நிராகரித்தார்.

மரியா தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை மேற்கூறப்பட்டவர்கள் முன்னமே அவர்களது அறிக்கைகளின் வழி தெரிவித்து விட்டனர். ஆகவே மேற்கொண்டு ஏழு நாள் அவகாசம் தேவையற்றது என்று மரியாவின் தலைமை வழக்குரைஞர் குர்தயால் சிங் நிஜார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் பதில் அளிக்க திங்கள்கிழமையையும் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை மதியத்தையும் ஆணையர் நிர்ணயித்ததாக குர்தயால் மேலும் கூறினார்.

செவ்வாய்க்கிழமை விசாரணை தொடங்கும் போது மரியா நீதி இருக்க வேண்டும் என்று செய்யப்பட்ட மனுவை அது வழக்கமான ஒன்றல்ல என்ற அடிப்படையில் ஆணையர் நிராகரித்து விட்டதாகவும் குர்தயால் தெரிவித்தார்.