மரியாவைப் பாராட்டிய அன்வார் கைது செய்யப்படுவதினின்றும் யாருக்கும் பாதுகாப்பில்லை என்றார்

anwarபெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லா    தடுப்புக்  காவலில்   வைக்கப்பட்டிருப்பதற்குக்  கண்டனம்    தெரிவிப்போர்   வரிசையில்   தற்போது  சிறையில்   உள்ள  பிகேஆர்   ஆலோசகர்   அன்வார்  இப்ராகிமும்   சேர்ந்து  கொண்டிருக்கிறார்.

மரியாதைக்குரிய   ஒரு   சிவில்   அமைப்புத்   தலைவரான   மரியா  போன்ற  ஒருவரே  பாதுகாப்புச்   சட்டத்தின்கீழ்   தடுத்து   வைக்கப்படும்போது    அதே  நிலை  மற்ற  மலேசியர்களுக்கும்   ஏற்படாது   என்பதற்கு   எந்த    உத்தரவாதமும்  இல்லை   என்று   அன்வார்  நேற்றிரவு   வெளியிட்ட   அறிக்கையில்   கூறினார்.

தமக்கு  முன்னாள்   உள்நாட்டுப்  பாதுகாப்புச்   சட்ட (ஐஎஸ்ஏ)  கைதியாக   இருந்த   அனுபவம்    இருப்பதால்   மரியா  படும்  துன்பத்தைத்   தம்மால்   புரிந்து   கொள்ள  முடிகிறது   என்றாரவர்.

“பத்து   கண்டோன்மெண்டில்  நான்   ஐஎஸ்ஏ-இல்   தடுத்து  வைக்கப்பட்டிருந்தபோது,  அங்குதான்  மரியாவும்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார்  என்று    நினைக்கிறேன்,  தூங்க  விடமாட்டார்கள்,   விட்டுவிட்டும்   குழம்பிப்போகும்   வகையில்  குறுக்கு   நெடுக்காக  விசாரணை    செய்வார்கள்,  தரமான  உணவு  கிடைக்காது,  சுத்தமும்  இருக்காது.

“இரவுபகலாக   பிரகாசமான  விளக்கு  ஓன்று   அறையில்   எரிந்து  கொண்டே   இருக்கும்”,  என்றாரவர்.