இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு டஜன் ஆள்கள் ஷா ஆலம் எம்பி காலிட் சமட் காரில் வந்து இறங்கியதும் அவரைச் சூழ்ந்து கொண்டு அசிங்கமாக திட்டத் தொடங்கினார்கள்.
அவர்களில் சிலர் காலிட்டைப் பாதுகாத்து நின்ற பாதுகாவலர்களைத் தாண்டிச் செல்ல முனைந்ததால் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதில் பாதுகாவலர்கள் சிலரும் தாக்குதல்காரர்கள் சிலரும் தரையில் உருண்டு புரண்டார்கள். இச்சம்பவத்தில் காலிட் காயப்படவில்லை.
தாக்குதல்காரர்களில் ஒருவர் , “காமி டாரி பாசிர் சாலாக் புக்கான் சியால்” என்று சத்தமிட்டார். பின்னர் அக்கும்பல் ஹிடுப் பாசிர் சாலாக்”, என முழக்கமிட்டவாறு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
அச்சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காலிட் அக்கும்பலில் இருந்த ஒருவர் பாரிர் சாலாக் எம்பியும் துணை அமைச்சருமான தாஜுடின் அப்துல் ரஹ்மானின் மகன் என்று கூறினார்.
“என் தந்தையை ‘சியால்’ என்று கூறியது ஏன் என்று அவர் என்னை வினவினார்”, என அந்த பாரிடி அமனா நெகாரா எம்பி தெரிவித்தார்.
தாஜுடினும் காலிட்டும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதமி்ட்டுக் கொண்டனர்.
டிஏபி எம்பி தெரேசா கொக்கை அவரது பெயரை வைத்து தாஜுடின் அவமதிக்கும் வகையில் பேசியதுதான் அவர்களிடையே வாக்குவாதம் மூள்வதற்குக் காரணமாகும்.
வாக்குவாதத்தின்போது தாஜுடினை “சியால்” என்று காலிட் குறிப்பிட்டார்.
தந்தையை ‘சியால்’ என்று கூறியதும் மகன் தானும் ‘சியால்’தான் என்று நிரூபித்து விட்டான்.
மலேசியாலில் இதெல்லாம் சகஜம்தானே !