பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு அமெரிக்க மத்திய உளவுத் துறை(சிஐஏ)யுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவது குறித்துக் கருத்துரைக்க இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்தார்.
அத்தொடர்பு குறித்து போலீசுக்குத் தகவல் கிடைத்துள்ளதா என்று கேட்டதற்கு, “நான் அது குறித்துக் கருத்துரைக்கப் போவதில்லை. சொன்னது யாரோ அவரையே கேளுங்கள்”, என்று சொல்லி விட்டார்.
மரியா வெளிநாட்டு அறநிறுவனமான ஓபன் சொசைடீஸ் அறநிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா, மரியாவுக்கும் அவரின் கணவர் யூனுஸ் லெபை அலிக்கும் 1980-களில் அவர்கள் என்ஜிஓ வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது சிஐஏயுடன் தொடர்பு இருந்தது என்று கூறியிருந்தார்.
ஆமாம் !! பிடிக்க காரணம் இல்லையென்றால் ! ஏதாவது காரணம் சொல்லி கோத்து விட்டு உள்ளே தள்ளுவது உலக போலீசாரின் வழக்கம் தானே !
மரியாவுக்கும் ISIS க்கும் தொடர்பு -தெரியாதாடா? வெங்காயம். பொய்யும் பித்தலாட்டமும் இந்த நாட்டை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.
மரியாவுக்கு CIA-வுடன் தொடர்பு என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் KGB-யுடன் தொடர்பு என்பீர்களா ? எப்படியோ போலீஸ் தண்ட சம்பளம் வாங்குகிறர்கள் என்பதை முறியடிக்க இப்படியெல்லாம் வதந்தியை கிளப்பி கேவலமான வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது.