அம்னோவும் பாஸும் அரசியலில் ஒத்துழைப்பது குறித்து ஒருபோதும் விவாதித்ததில்லை என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி.
‘உம்மா’ (முஸ்லிம்கள்) நலன் குறித்து மட்டுமே அவை விவாதித்துள்ளன.
“முஸ்லிம்களின் நலன் பற்றி, இன்னும் தீர்க்கப்படாதிருக்கும் விவகாரங்களுக்குக் கூட்டாக தீர்வு காண்பது குறித்து பேசப்பட்டிருக்கிறது. அதை (அம்னோவுடன் பேச்சு நடத்த முன்வந்ததை) பாஸ் தலைவர்களின் ஒரு நல்ல அணுகுமுறை என்பேன்”, என்று அவர் அடுத்த வார அம்னோ பேரவைக்குமுன் பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கூறினார்.