1948 தேசநிந்தனைச் சட்டம் பகுதி 3(3) செல்லாது என்று அதிரடித் தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம், தேச நிந்தனை செய்யும் நோக்கம் இருந்தது நிரூபிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு நடப்பில் உள்ள எல்லா நிந்தனை வழக்குகள்மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார்.
மாட் சுஹாய்மி ஷாபியிக்கு எதிரான அரசுத் தரப்பு வழக்கில் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.
தேசநிந்தனைச் சட்டம் பகுதி3 (3), பேச்சுரிமைக்கு இடமளிக்கும் அரசமைப்பின் 10ஆம் சட்டப்பிரிவை மீறுகிறது என்பதால் செல்லாது, அதை அமல்படுத்த இயலாது என நீதிபதி வர்கீஸ் ஜார்ஜ் வர்கீஸ் தீர்ப்பளித்தார்.
மாட் சுஹாய்மி, சிலாங்கூரின் மாநிலச் செயலாளர் நியமனம் குறித்து அவரது srimuda.blogspot.com-இல் பதிவிட்டிருந்த ஒரு கட்டுரை நிந்தனை நோக்கம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டு 2011 பிப்ரவரியில் அவருக்கு எதிராக தேச நிந்தனை வழக்கு தொடுக்கப்பட்டது.
ஸ்ரீமூடா சட்டமன்ற உறுப்பினரான மாட் சுஹாய்மி சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளருமாவார்.
மின்னல் கீற்று போல் சில தீர்ப்புக்கள் ; நமக்கு நீதி மன்றத்தின்
மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்திய, சீன நீதிபதிகள் என்றால் மின்னல்கீற்று தோன்றும்! மலாய்க்கார நீதிபதி வந்தால் மின்னல் கீற்று, கீற்று கீற்றாக கிண்டலடிக்கும்!
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது– ஆனால் இது முடிவானதா? மேலே சில அம்னோ குஞ்சுகள் உட்கார்ந்து இருக்கின்றன–இதை மாற்ற அதிக நேரம் இருக்காது.