மரியா விடுதலைக்காக பேரணி நடத்துவோர் மீது போலீஸ் நடவடிக்கை: ஐஜிபி எச்சரிக்கிறார்

bebasபெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவை  விடுவிக்கக்  கோரி   போராட்டம்   நடத்துவோர்   போலீஸ்   நடவடிக்கையை    எதிர்கொள்ள   தயாராகுமாறு      போலீஸ்  படைத்   தலைவர்   காலிட்  அபு   பக்கார்    கூறியுள்ளார்.

டட்டாரான்  மெர்டேகாவில்     மெழுகுவத்தி   ஏந்தி  நடத்தப்படும்  போராட்டங்கள்    சட்டவிரோதமானவை    என்றும்   அவற்றுக்கு   எதிராக   போலீஸ்   நடவடிக்கை   எடுக்கும்    என்றும்   இரண்டு  நாள்களுக்குமுன்   காலிட்   எச்சரித்திருந்தார்.

“எச்சரிக்கை   விடுத்து   அலுத்துப்  போய்விட்டது. மெழுகுவத்தி  ஏந்திப்   போராடுவோருக்கும்   மற்றவர்களுக்கும்  கூறிக்  கொள்கிறேன்,  இனி   எச்சரிக்கை  கிடையாது”,  என்றாரவர்.

“(போலீஸ்)   நடவடிக்கைதான்”,  என்றாரவர்.

“ஒருங்கு  கூடுவதாக   இருந்தால்   சட்டப்படியும்  முறைப்படியும்   அதைச்   செய்ய  வேண்டும்.

“விதிகளையும்  சட்டங்களையும்   பின்பற்றவில்லை   என்றால்  சட்டத்தால்   என்ன  பயன்?”,  என்றவர்   வினவினார்.

பாதுகாப்புச்   சட்டத்தின்கீழ்   தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்   மரியாவுக்கு   ஆதரவாக   பெர்சே    திங்கள்கிழமை   தொடங்கி   மெழுகுவத்தி   ஏந்தி   விழித்திருக்கும்  போராட்டத்தை   நடத்தி   வருகிறது.