கிளந்தான், குவா மூசாங் உள்பகுதியில் மரம் வெட்டுவோரைத் தடுக்க முனைந்ததற்காக கைது செய்யப்பட்ட 41 ஓராங் அஸ்லி சமூகப் போராட்டவாதிகள் விசாரணைக்காக இரண்டு நாள் தடுத்து வைக்கப்பட்டனர்.
நேற்று பிற்பகல் பாலா, பெரியாஸ் ஸ்டோங் செலாதான் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் அவர்கள் அமைத்திருந்த தடுப்பு அரண்களை போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் உடைத்தெறிந்து அவர்களைக் கைது செய்தனர்.
சமூகப் போராட்டவாதிகள் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டபோது அவரக்ளுக்கு ஆதரவாக சுமார் 50 ஓராங் அஸ்லிகள் குவா மூசாங் நீதிமன்றம் நோக்கி ஊர்வலம் சென்றனர்.
வழிநெடுகிலும் அவர்கள் “எங்கள் நண்பர்களை விடுதலை செய்யுங்கள்”, “வாழ்க ஓராங் அஸ்லிகள்”, வாழ்க கிளந்தான் மக்கள்” என்று முழக்கமிட்டுக்கொண்டே சென்றார்கள்.
பரிதாபத்திற்கு உள்ளான பூர்வீகக்குடிகள் ! ஆளவேண்டிய பரம்பரை , அரை வயிறு கஞ்சிக்கு அல்லல் படுகிறது .