குவாங் மூசா எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, தம் தொகுதிவாழ் ஓராங் அஸ்லிகளின் கோரிக்கைகள் தமக்குப் புரிகிறது என்றுரைத்து அதே நேரத்தில் அவர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவும் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இன்று அம்னோ பொதுப்பேரவைக் கூட்டத்துக்கிடையே செய்தியாளர்களிடம் தெங்கு ரசாலி பேசினார். மரம் வெட்டுவோரைத் தடுக்க தடுப்பு அரண்கள் அமைப்பதற்கு ஓராங் அஸ்லிகளிடம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் அது சட்டவிரோதமான செயல்தான் என்றார்.
“அது சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாகும். அவர்களின் போலீசின் உதவியை நாடியிருக்க வேண்டும்”, என்றவர் சொன்னார்.
11வது தவணையாக குவாங் மூசா எம்பியாக உள்ள தெங்கு ரசாலி தம் தொகுதிவாழ் ஓராங் அஸ்லி சமூகம் பிழைப்பு நடத்தவே சிரமப்படுவதை உணர முடிகிறது என்றார்.
“நீர் அழுக்காக உள்ளது. மரவெட்டிகள் கண்மூடித்தனமாக மரங்களை வெட்டிச் சாய்த்து அவர்களின் கிராமங்களையும் அழித்து விட்டதால் அவர்களின் பயிர்கள் எல்லாம் நாசமாகிவிட்டன”, என தெங்கு ரசாலி கூறினார்.
அதற்காக மரவெட்டிகளைத் தண்டிக்க வேண்டாமா என்று வினவியதற்கு அதை கிளந்தான் அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஓராங் அஸ்லிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்கட்டுமே நீங்கள்தான் தவறு செய்யாதவர்கள் ஆயிற்றே. ஏன் பயம் ?
ஓராங் அஸ்லி களுடன் காட்டில் வாழ்ந்தால்தான் அவர்களின துயரங்களை , தெங்கு ரசாலி அம்சாவால் உணர்ந்துக்கொள்ள முடியும்.
பிழைப்புக்கு வழி இல்லாமல், குழைந்தை குட்டிகளுடன் நாங்கள் படும் நரக வேதனை உங்களுக்கும் தெரியும் ? எல்லாம் தெரிந்த நீங்கள் என்ன செய்தீர்கள் ? நாங்கள் ஓடு போட்டு , பஞ்சணையில் அமரவைத்தோம் , நீங்களும் பஞ்சு மெத்தையில் உல்லாச வாழ்க்கை அனுபவம் ! ஆனால் நாங்கள் ? பன்றிகள் புரண்ட மலத்தில் உறங்குகிறோம் !காட்டையே நம்பிவாழும் எங்களை , எங்கள் குடும்பத்தை கூண்டோடு குழி தோண்டி புதைக்க வருபவர்களை கை கட்டடி பார்க்க சொல்ல்கிறீர்களா ?? MR MP // ???????????????
ஓராங் அஸ்லி என்பவர் காட்டுவாள் மக்கள் ! படிப்பறிவில்லாத அவர்களுக்கு சட்டத்தை பட்ட்றி என்ன தெரியும் ! அவர்களின் பிழைப்பில் க்கை வைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் ! கிளந்தான் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றால் ! உங்கள் தொகுதி மக்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள் !