புத்ரா பேருந்து முனையம் பல ஆண்டுகளுக்கு முன்பே அம்னோவுக்கு விற்கப்பட்டு விட்டதாக கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசீஸ் கூறினார்.
“அதை அம்னோவுக்கு விற்றோம். அது பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டில் அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே அது அம்னோவுக்கு விற்கப்பட்டது”, என்றாரவர்.
புத்ரா உலக வாணிக மைய மறுமேம்பாட்டுத் திட்டத்தில் புத்ரா பேருந்து மையமும் உள்ளிட்டிருக்கும். அந்த முனையம் உள்ள இடத்தில் 70-மாடி அலுவலகக் கட்டிடமும் தங்கு விடுதியும் கட்டப்படும்.
இரண்டு நாள்களுக்கு முன்பு பிரதமர் நஜிப் அப்துல் ர்சாக் அத்திட்டத்தை அறிவித்தார்.
70-மாடி அலுவலகம் கட்டி ஏழரையை விருந்தாளியாய் அழைக்கிறீர்கள் !