தன்னார்வ ரோந்து படையைக் கலைப்பீர்: பினாங்குக்கு ஐஜிபி வலியுறுத்து

igpபோலீஸ்   நடவடிக்கை   எடுக்குமுன்னர்    பினாங்கு   அரசு   மாநில  தன்னார்வ  ரோந்து  படையைக்  கலைப்பது   நல்லது   என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ்   காலிட்   அபு   பக்கார்   அறிவுறுத்தினார்.

“அதை   வைத்திருப்பதில்   பயனில்லை, எப்படியும்  அது   சட்டவிரோதமானது  என்று   அறிவிக்கத்தான்   போகிறோம்”,  என்று   காலிட்   இன்று   பினாங்கில்   கூறினார்.

“மாநிலப்  பாதுகாப்பையும்   நாட்டின்  பாதுகாப்பையும்   போலீசால்  கட்டிக்  காக்க  முடியும்   என்பதற்கு  உத்தரவாதம்   அளிக்கிறேன்”,  என்றாரவர்.

“இந்தச்  சீருடைப்  படை  இன்றி    மாநிலத்தில்    ஒழுங்கின்மை  பெருகும்   என்று  பினாங்கு  அரசு  அச்சம்  கொள்ளத்   தேவையில்லை.

“மாநிலத்தில்    அல்லது  நாட்டில்   அப்படியொரு  நிலை   உருவாக  அனுமதியோம்”,  என்று  காலிட்  உறுதியளித்தார்.