அம்னோ, மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜோகூர் பேராளர் ஒருவர் வலியுறுத்தினார்.
மலாய்க்காரர்களின்றி அம்னோ ஒன்றுமில்லாததற்குச் சமம் என்று கெமேலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட் கூறினார்.
“மலாய்க்காரர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதை அம்னோ நிறுத்திக்கொள்ள வேண்டிய நேரம் வந்தாயிற்று.
“அதற்குப் பதிலாக, இதுவரை அவர்கள் கொடுத்து வந்துள்ள ஆதரவுக்காக அம்னோ நன்றி தெரிவிக்க வேண்டும்”, என ஆயுப் இன்று அம்னோ பொதுப் பேரவையில் கூறினார்.
மலாய்க்காரர் உரிமைகளுக்கு ஆபத்து ஏதுமில்லை. மாறாக, 21ஆம் நூற்றாண்டில் மலாய்க்காரர்கள் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா என்பதே இப்போதைய பிரச்னை என்றாரவர்.
அதற்கு ஆறு புதிய அணுகுமுறைகள் தேவை. மலாய்க்காரர்களைப் பொருளாதார வலிவாற்றல் மிக்கவர்களாக மாற்றுதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், மலேசியாவை முன்னிலும் இஸ்லாமிய பற்றுள்ள நாடாக அதேவேளை மிதவாத நாடாக உருவாக்குதல், தரமான கல்வி, நல்லாட்சி, மலாய்க்காரர்களைச் சிறந்த சமூகமாகத் திகழச் செய்தல் ஆகியவையே அந்த ஆறுமாகும் என ஆயுப் கூறினார்.
பொருளாதாரம்: இப்போது உங்களோடு சேர்ந்து இந்தோனேசியர், தாயலாந்து, பங்களா அனைவரும் சேர்ந்து கொண்டதால் வலுவுள்ளதாக மாறும். வாழ்க்கைத்தரம்: நீங்கள் தான் முன்னணி. தரமானக்கல்வி: நீங்கள் படிக்கத் தயாரா? சிறந்த சமூகம்: வலுவான சமயக்கல்வி. இஸ்லாமிய பற்று: முதலில் நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்.
உண்மையை உணர்ந்து துணிவோடு பேசிய பேராளருக்கு நன்றிகள்.மலாய்க்காரர்கள் செம்மரி ஆடுகளைப்போல அம்னோவை ஆதரிப்பதால் தலைகள் துணிச்சலாக ஊழலில் குளிக்கிரார்கள்.ரிங்கிட்டின் மதிப்பு படுவீழ்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றன. அம்னோ தொடர்ந்தால் ரிங்கிட்டை சுமக்க ஆள் தேவைப்படும்.
இந்த விவாதம் நமக்கு தேவையற்றது ! அவர்கள் கட்சி ! அவர்கள் பாடு ! நாம் நம் வழியில் முன்னேறும் வழியை பார்ப்போமே !!