மற்ற இடங்களில் எப்படியோ ஆனால், கிளந்தானில் அம்னோவின் எதிரி என்று அம்னோ பேராளர் ஒருவர் அம்னோ பொதுப் பேரவையில் முழக்கமிட்டார்.
“தேசிய நிலையில் கிளந்தானின் ஆளும் கட்சி(பாஸ்) அம்னோவுடன் நட்பாக இருப்பதுபோல் தெரிகிறது ஆனால் உண்மையில் – விரும்புகிறீர்களோ இல்லையோ- கிளந்தானில் உள்ள எங்களுக்கு அதுதான் தெள்ளத் தெளிவான அரசியல் எதிரி.”, என குவா மூசாங் பேராளர் முகம்மட் ஷியாபுடின் ஹாஷிம் கூறினார்.
பாஸ், டிஏஇயுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட பின்னர் பக்கத்தான் ரக்யாட் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அது அம்னோவுடன் நட்பு பாராட்டி வருகிறது.
ஆனாலும் பாஸ் தலைவர்கள் அம்னோ தங்களுக்கு எதிரிதான் என்றும் பிஎன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே தங்களின் நோக்கம் என்றும் கூறி வருகிறார்கள்.