மலேசிய ஊழல் -தடுப்பு ஆணையம் இருக்கிறதே அது கையூட்டு கொடுப்பவர்களைத்தான் பிடிக்க வேண்டும், பெறுபவர்களைப் பிடிக்கக் கூடாது என்று பேராளர் ஒருவர் அம்னோ பேரவையில் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
“கொடுப்பதற்கு ஆள் இல்லை என்றால் வாங்குவதற்கும் ஆள் இருக்க மாட்டார்கள்”, என நெகிரி செம்பிலான் பேராளர் ஷம்சுல் அம்ரி இஸ்மாயில் கூறினார்.
அம்னோ பேராளர்கள் சமயப் பற்றாளர்களாக திகழ்ந்து ஊழலை புறக்கணித்து அவர்கள்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
கையூட்டு தொடர்பாக நடைபெறும் ஓரு நகைச்சுவையான உரையாடலையும் அவர் எடுத்துக் கூறினார்.
ஏ: இதோ ரிம50.
பி: என்னிடம் லஞ்சம் கொடுக்கும் வேலை வேண்டாம்
ஏ: ரிம100?
பி: என்னை ஆழம் பார்க்காதே.
ஏ: ரிம500?
பி: அளவுமீறிப் போகிறாய்.
ஏ: ரிம700?
பி: என் பொறுமைக்கும் எல்லை இருக்கிறது.
ஏ: ரிம1,000?
பி: சத்தம் போட்டு சொல்லாதய்யா.
இதைக் கேட்டு அவை குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.
அட முட்டாப்பய மவனே!
அவன் முட்டாப்பயமவன் மட்டும் இல்லை– வடிக்கட்டிய அறிவிலி- கையூட்டு கொடுக்காவிட்டால் அதிகாரத்தில் உள்ளவன் மக்களின் தேவைகளை உண்மையான உணர்வோடு பூர்த்தி செய்வானா? இந்தியன் தமிழ் படத்தை அந்த நாதாரிக்கு போட்டு காண்பிக்கவேண்டும்.