பினாங்கில் தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவெடுக்கப்பட்டதாக அப்படையை மேற்பார்வை செய்யும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ தெரிவித்தார்.
அப்படையின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதற்கு போலீசும் ஒரு காரணமாகும். அப்படையைக் கலைக்கும்படி அது அறிவுறுத்தி இருந்தது.
“உள்துறை அமைச்சிடம் முறையிட்டிருக்கிறோம். அதனுடன் பேச்சு நடத்தி இவ்விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்”, என்றாரவர்.
நல்லது நடப்பது அம்னோ நாதாரிகளுக்கும் அதன் குண்டர் படைக்கும் என்றுமே பிடிக்காது. இந்த நாடு இந்த நிலையில் இருப்பது என் என்று இப்போது புரியுமே