“நிர்மாணிக்கப்பட்ட” 19 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றனவா?

IMG_20161203_142101 (1)

பிரதமர் துறை மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு பிப்ரவரி 2014 இல் வெளியிட்டுள்ள ஒரு செயலறிக்கையில் “2012 பட்ஜெட்டில் மாற்றிடங்களில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்” அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அந்த அட்டவணையில் கீழ்க்கண்ட நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது:

எண் பள்ளி மாநிலம் நிதியுதவி(ரி.ம)
1 மவுண்ட் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளி ஜொகூர் 1,295,000.00
2 துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி ஜொகூர் 2,500,000.00
3 தெபராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் 2,500,000.00
4 புக்கிட் செரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் 3,000,000.00
5 கூலாய் ஆய்ல்பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் 2,500,000.00
6 சங்லூன் தமிழ்ப்பள்ளி கெடா 2,500,000.00
7 ரும்பியா தமிழ்ப்பள்ளி மலாக்கா 2,500,000.00
8 சங்காய் தமிழ்ப்பள்ளி நெ.செம்பிலான் 2,000,000.00
9 பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நெ.செம்பிலான் 1,000,000.00
10 குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நெ.செம்பிலான் 1,000,000.00
11 ரிஜண்ட் தமிழ்ப்பள்ளி, கெமென்செ நெ.செம்பிலான் 2,500,000.00
12 ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பாகாங் 2,000,000.00
13 லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி பாகாங் 3,000,000.00
14 புளுவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி பாகாங் 2,000,000.00
15 டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி பாகாங் 2,000,000.00
16 கோத்த பாரே தோட்டத் தமிழ்ப்பள்ளி பேராக் 2,000,000.00
17 வால்டார் தோட்டத் தமிழ்ப்பள்ளி பினாங்கு 4,000,000.00
18 சீபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் 4,000,000.00
19 மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் 2,000,000.00

 

இந்த அட்டவணையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் 19 தமிழ்ப்பள்ளிகளில் மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி IMG-20161128-WA0014நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலத்தில் அப்பள்ளி இல்லை. வெறும் சிமெண்ட தூண்கள் மட்டுமே காணப்படுகின்றன.

எஞ்சியுள்ள 18 நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ்ப்பள்ளிகளின் நிலவரம் என்ன என்று தெரியவில்லை.