மூத்த ஆர்வலர்களுக்கு எதிராக ஹிண்ட்ராப் தலைமைத்துவத்தின் சட்ட நடவடிக்கை!

Ganesanஇந்நாட்டு ஏழை இந்தியச் சமுதாயத்தின் நல்வாழ்விற்காக  தேசிய முன்னணியுடன் 2013 இல்  ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கை தோல்வி அடைந்ததுள்ளது. அது சார்பாக கேள்வி எழுப்பி அதிலிருந்து வெளியான எட்டு மூத்த ஆர்வலர்கள் ஹிண்ட்ராப் தலைமைத்துவத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்கிறார் அதன் முன்னாள் ஆலோசகர் என். கணேசன்.

புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கையின் தோல்வி பிரதமர் நஜிப்பும்  தேசிய முன்னணி கட்சியும்  நம் சமுதாயத்தை ஏமாற்றி துரோகம் புரிந்து விட்டதாகவே கருதப்படும் என்கிறார் கணேசன்.

இது சார்பாக ஹிண்ட்ராப்பின் மூத்த ஆர்வலர்கள் எட்டு பேர், அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேதமூர்த்தியை தலைவராக கொண்டுள்ள ஹிண்ட்ராப் இயக்கத்தை வலியுறுத்தினர்.  ஆனால், அதற்கு தலைமைத்துவத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதைப் பற்றி கேள்வியோ கருத்தோ எழுப்பினால் பல்வேறு சாக்கு போக்குகளைக்  கூறி  மழுப்பி கொண்டே அது இருந்தது.

Hindraf Mouமேலும் அவர் விவரிக்கையில்,   நம் சமுதாயத்திற்கு  தொடர்ந்து  ஏற்படும்   துரோகத்தை காணப் பொறுக்காமல் அந்த இயக்கத்தை விட்டு கனத்த மனதோடு தாங்கள்  கடந்த மார்ச் மாதம்  வெளியேறியதாக கூறினார்.

ஹிண்ட்ராப் – தேசிய முன்னணியின் புரிந்துணர்வு ஒப்பந்த  உடன்படிக்கை தோல்வி சம்பந்தமான  தங்களின்  கருத்துக்களை தகவல் ஊடகங்களில் பதிவு செய்ததற்காக     தற்போதைய   ஹிண்ட்ராப் தலைமைத்துவம்  தங்கள் மீது  சட்டபூர்வ நடவடிக்கை  எடுக்கப்போவதாய், அடுக்கடுக்காக கடிதங்களை அனுப்பிக் கொண்டே  இருக்கிறது.

மனித உரிமை பாதுகாவலர் என்று பிரகடனப்படுத்தி கொண்ட ஹிண்ட்ராப் இயக்கம் இன்று,  நம் ஏழை  சமுதாய நலனுக்காக  பரிமாறப்படும் கருத்து சுதந்திரத்தை முடக்கப் பல யுக்திகளை  கையாள்வது விந்தையாக உள்ளதாக கணேசன் கூறினார்.

தற்போதைய ஹிண்ட்ராப் தலைமைத்துவம்   அதன் முன்னாள்  மூத்த ஆர்வலர்கள் மீது  மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகள்:

முதலாவது,  சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் தேசிய ஆலோசகர் கணேசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கு.

Hindraf1இரண்டாவதாக,  ஹிண்ட்ராப்   பெயரின்மேல்  தனியுரிமை  கோரி,  அதை துஸ்பிரயோகம் செய்து விட்டதாகவும் அதனால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வழக்குரைஞர்  கடிதங்கள்  தமிழ்ச்செல்வம் (முன்னாள் ஹிண்ட்ராப் துணைத் தலைவர்),  ரமேஷ் பெரியசாமி (ஹிண்ட்ராப் முன்னாள் செயலாளர் மற்றும்  பேராக் மாநில ஒருங்கிணைப்பாளர்),  கலைச்செல்வன் (முன்னாள் ஹிண்ட்ராப் மத்திய குழு உறுப்பினர் மற்றும்  முன்னாள் பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர்) மற்றும்  நாகேந்திரன் (முன்னாள் ஹிண்ட்ராப்  மூத்த ஆர்வலர்)  ஆகியோருக்கு அனுப்பப்பட்டன.

மூன்றாவதாக, சமூக  ஊடகங்களில் செய்த கருத்துப் பதிவுகளுக்காக  முன்னாள்  ஹிண்ட்ராப்  மூத்த ஆர்வலர்களான  ரமேஷ் பெரியசாமி மற்றும்  இரா.கோமளம்  ஆகியோருக்கு எதிராக  அவதூறு  வழக்கு  தொடுக்க போவதாய் வழக்கறிஞர்  கடிதங்கள்.

சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இயக்க அளவில் போராடி அதில் கிடைத்த ஏமாற்றம் காரணமாக உருவான சமூக நலன் சார்புடைய  பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள்   நமது  சமுதாய மேன்மைக்கு  இன்றியமையாததாகும் என்று கூறிய கணேசன்,  அதை சட்ட நடவடிக்கை வழி முடக்கக்கூடாது என்று மேலும் கூறினார்.