மகாதிர்: ஒரு பிரதமர் ஏன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்?

 

MwhyshouldPMரோஹிங்யா விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஏன் பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் வினவினார்.

அரசாங்கங்களை எதிர்ப்பதற்குதான் ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்தின் பங்கு ஆர்ப்பாட்டம் செய்வதல்ல, நடவடிக்கை எடுப்பதாகும் என்றாரவர்.

“நாங்கள் அரசாங்கமாகும் போது, ரோஹிங்யாக்கள் நடத்தப்படும் முறை குறித்து நமது அதிருப்தியைக் காட்டுவதற்கு அரசுதந்திர உறவை முறித்துக் கொள்வது எனது முன்மொழிதலாக இருக்கும்.

“அவர் (நஜிப்) பிரதமராக இருக்கையில், அவர் ஓர் ஆர்ப்பாட்டத்திற்குப் போகிறார். அவர் யாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கிறார்”, என்று மகாதிர் ஷா அலாமில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் ஜனநாயக ஆதரவு தலைவர் சூ கீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது தாம் மியன்மார் ஆட்சியாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பியதோடு தூதர்களையும் அனுப்பியதாக மகாதிர் தெரிவித்தார்.

“நான் (இப்போது) தெரு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்கிறேன் ஏனென்றால் நான் அரசாங்கத்தில் இப்போது இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.