ஷியாரியா நீதிமன்றச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக மொண்டுவரப்படும் சட்டமுன்வரைவை பாஸிடமிருந்து எடுத்துக்கொண்டு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாலும்கூட அது அரசமைப்புக்கு விரோதமானது எனத் தெரிந்தால் கெராக்கான் அதை எதிர்க்கும்.
கெராக்கான் தலைவர் மா சியு கியோங் இதைத் தெரிவித்தார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கொண்டுவரவுள்ள சட்டம் 355 மீதான சட்டமுன்வரைவு குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது தொடர்பாக கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
அம்னோ தலைவருமான நஜிப், அம்னோ பொதுப் பேரவையில் கொள்கை உரை ஆற்றியபோது அப்துல் ஹாடி ஆவாங் அச்சட்டத்தைத் திருத்துவதற்காக கொண்டுவரவுள்ள சட்டமுன்வரைவை அரசாங்கம் “எடுத்துக்கொண்டு” தாக்கல் செய்யும் என்று கூறியிருந்தார்.
டேய் வெங்காயம் உனக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் இப்போது காண்பிடா– அம்னோ எலும்பு துண்டுக்கு சப்பினால் இதுவும் வரும் இன்னமும் வரும்.