ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து குறைந்தால் பெரோடுவா அதன் கார் விலையை மறுபரிசீலனை செய்யும்

peroduaமுக்கிய   நாணயங்களுக்கு    எதிராக   ரிங்கிட்டின்   மதிப்பு    தொடர்ந்து    குறைந்து   வந்தால்  பெரோடுவா   நிறுவனம்    அதன்   கார்களின்  விலைகளை   மறுபரிசீலனை   செய்யக்கூடும்.

இதற்குக்  காரணம்   அதன்   தயாரிப்புக்குத்   தேவைப்படும்   பாகங்கள்    யுஎஸ்  டாலர்   மற்றும்  ஜப்பானிய    யென்னில்   வாங்கப்படுவதுதான்.

“யுஎஸ்  டாலருக்கு    எதிராக   ரிங்கிட்டின்   மதிப்பு    தொடர்ந்து  பலவீனமாக  இருக்குமானால்    அடுத்த   ஆண்டில்   நாங்கள்   எங்கள்  கார்களின்   விலைகளை   மறுபரிசீலனை    செய்யக்கூடும்”,  என  பெரோடுவா   தலைவரும்   தலைமை   செயல்   அதிகாரியுமான   அமினார்  ரஷிட்    சாலே   கூறினார்.

இவ்வாண்டு  பெரோடுவா   விற்பனை   4.8விழுக்காடு   குறைந்து   விட்டதாக  அமினார்   சொன்னார்.