கெளரவமாக விலகிக் கொள்ளும் வாய்ப்பை முகைதினும் ஷாபியும் ஏற்கவில்லை

dahlanமுகைதின்   யாசினையும்   ஷாபி   அப்டாலையும்    அரசாங்கத்திலிருந்து   பணிநீக்கம்    செய்யுமுன்னர்   அவர்கள்  தாங்களாகவே   அமைச்சரவையிலிருந்து   விலகுவதற்குப்     பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்   அவர்களுக்கு    வாய்ப்பளித்ததாக    அப்துல்  ரஹ்மான்   டஹ்லான்    கூறினார்.

“விலக்குவதற்கு முன்  அவர்கள்    கெளரவமாக    அமைச்சரவையிலிருந்து   விலகிக்கொள்ள     நஜிப்   வாய்ப்பு   அளித்தார்.

“ஆனால்,  அவர்கள்   விலகிக்கொள்ள  விரும்பவில்லை”,   எனப்   பிரதமர்துறை   அமைச்சரான   ரஹ்மான்  டஹ்லான்   கூறினார்.

அவர்கள்  விலக  மறுத்ததால்,  வேறு  வழியில்லாது    பிரதமர்  அவர்களை  விலக்க   வேண்டியதாயிற்று    என்றாரவர்.

1எம்டிபி  குறித்து    குறை  கூறியதுதான்    அவர்கள்   விலக்கப்பட்டதற்குக்   காரணம்    என்றால்   2014-இலேயே   அவ்விருவரும்    பதவியிலிருந்து   தூக்கப்பட்டிருப்பார்கள்      என்றும்  அவர்   சொன்னார்.

ஆனால்,  இவ்வாண்டு   ஜூனில்தான்   அவர்கள்  அம்னோவிலிருந்து   விலக்கப்பட்டார்கள்.  எதிரணியுடன்   அணுக்கமாக   இருந்ததுதான்   அதற்குக்    காரணமாகும்.