பெர்சே பேரணி: விசாரணைக்காக கிள்ளான் எம்பி அழைக்கப்பட்டார்

mpநவம்பர்   19   பெர்சே   பேரணிமீது   விசாரணை   நடத்திவரும்   போலீசார்   அவர்களின்   விசாரணைக்கு   உதவியாக    இன்று   கிள்ளான்   எம்பி   சார்ல்ஸ்   சந்தியாகுவை   அழைத்திருந்தனர்.

வாக்குமூலம்     அளிப்பதற்காக     சந்தியாகு    செந்தூல்   மாவட்ட   போலீஸ்   தலைமையகத்துக்குச்   சென்றார்.

அங்கு  அவரிடம்    அவருக்கு   எதிராக   போலீஸ்   புகார்   எதுவும்   இல்லை   என்று   தெரிவிக்கப்பட்டது.

“அவர்கள்  என்னிடம்   சில    தகவல்களைத்   தெரிந்துகொள்ள    விரும்பினார்கள்.  நான்  பங்சாரில்  இருந்தேனே,  உரையாற்றினேனா,   சில  ஆள்களை  அடையாளம்  காண்பிக்க  முடியுமா    என்று   கேட்டார்கள்.

“நான்  தேர்தல்கள்    சுதந்திரமாகவும்   நியாயமாகவும்   நடத்தப்பட   வேண்டியதன்  முக்கியத்துவம்   பற்றிப்    பேசியதாக   சொன்னேன்.

“அத்துடன்   அவர்களை  (அடையாளம்  காண்பிக்கச்  சொன்ன     ஆள்களை)  அறிமுகமில்லாதவர்கள்  என்றும்   கூறினேன்”,  என  சந்தியாகு   தெரிவித்தார்.

போலீஸ்   கேள்விகள்   கேட்ட   விதத்தைப்  பார்க்கையில்   மேலும்  பலர்   விசாரணைக்கு   அழைக்கப்படலாம்   என்று   தோன்றுவதாகவும்    அவர்  குறிப்பிட்டார்.