பினாங்கு உயர் நீதிமன்றம் முதலமைச்சர் லிம் குவான் எங் ஜாலான் பின்ஹோர்ன் பங்களா வீடு வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கை விசாரிப்பதற்கு 2017-இல் 34 நாள்களை ஒதுக்கியுள்ளது.
அரசுத் தரப்பில் 60 சாட்சிகள் விசாரிக்கப்பட விருப்பதாக நீதிபதி ஹடாரியா சைட் இஸ்மாயில் கூறினார்.
வழக்கு விசாரணை மார்ச் 27-இல் தொடங்கும். மார்ச் 27-இலிருந்து 31வரை, ஏப்ரல் 10இலிருந்து 14வரை, ஏப்ரல் 24இலிருந்து 28வரை, மே15இலிருந்து 19வரை, மே 29இலிருந்து ஜூன் 2வரை, ஜூன் 13இலிருந்து 16வரை, ஜூலை 17இலிருந்து 21வரை என விசாரணைகள் நடைபெறும்.
வழக்கு தொடர்பான விவகாரங்கள், ஆவணங்கள் போன்றவற்றில் அரசுத் தரப்பும் எதிர்த் தரப்பும் ஜனவரி 6க்குள் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று நீதிபதி கூறினார்.
“ஜனவரி 6க்குள் அவைமீது உடன்பாடு காணப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு மாதங்களாக அவை மீது பிரச்னை நிலவுவதாகக் கேள்விப்படுகிறேன். அதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்”, என்றாரவர்.