மியான்மாரில் உள்ள மலேசிய ஆயுதப்படைத் தலைவர் இரண்டு நாடுகளுக்குமிடையில் உறவுகளைச் சீர்படுத்த முனைவார்

rohinyaமியான்மியார்    சென்றுள்ள   மலேசிய    ஆயுதப்படைத்    தலைவர்    ஜெனரல்   சுல்கிப்ளி  முகம்மட்  ஸின்      சீர்கெட்டுப்போன    இரு  நாட்டு    உறவுகளைச்   சீர்படுத்தும்  முயற்சியில்   ஈடுபட்டிருப்பதாக      அறிவிக்கப்பட்டுள்ளது.

சுல்கிப்ளி   மியான்மார்    அதிபர்   யு  ஹ்டின்  க்யாவையும்   மூத்த   ஜெனரல்   மின்  அவுங்   ஹ்லாயிங்கையும்    சந்தித்தாக   மியான்மார்  டைம்ஸ்   கூறியது.

சந்திப்பு      நடந்ததை    மியான்   ஆயுதப்  படை  உயர்த்   தலைவர்    அலுவலகம்  வெளியிட்ட    அறிக்கை   உறுதிப்படுத்தியது.

“முஸ்லிம்  ரோஹின்யாக்கள்மீது   மனித  உரிமை   மீறல்கள்    நடந்ததில்லை    என்பதை  மூத்த    ஜெனரல்  மின்   அவுங்   ஹ்லாயிங்     தமது  மலேசிய   சகாவிடம்    தெரிவித்தார்   என   அவ்வறிக்கை  கூறியது”,  என  டைம்ஸ்    தெரிவித்தது.

இவ்விசயத்தில்   மியான்மார்   அதிகாரிகள்   பொய்   சொல்ல  முடியாது.  உள்நாட்டு,  அனைத்துலக   கவனம்   எல்லாம்   அந்நாட்டின்மீதுதான்   இருக்கிறது”,  என  அச்செய்தி   கூறியது.

அரசதந்திர   உறவுகள்    பதற்றமடைய    “தப்பான   செய்திகளே”   காரணம்  என்றும்   அவ்வறிக்கை   குறிப்பிட்டது.