அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் புதிய இராணுவக் கொள்கையை அறிவித்துள்ளார். அமஎரிக்க இராணுவம் இனி அந்நிய நாட்டுச் சச்சரவுகளில் தலையிடாதாம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய அரசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் (ஐஎஸ்) தீவிரவாதிகளை ஒழிப்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படுமாம்.
நவம்பர் 8 தேர்தல் வெற்றிக்கு நன்றி சொல்வதற்காக நாடு முழுவதும் பயணம் செய்து வரும் ட்ரம்ப், வட கெரோலின்னாவில், 90 நாடுகளுக்கு அமஎரிக்கப் படைகளை அனூப்பிவைத்த பிரேக் கோட்டை இராணுவ முகாமுக்கு அருகில் பேயட்வில் என்ற நகரில் ஒரு கூட்டத்தில் பேசினார்.
“வெளிநாடுகள் பற்றி ஒன்றுமே அறியாமல் அவற்றின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முந்திக்கொண்டு ஓடுவதை நிறுத்துவோம்”, என்றுரைத்த ட்ரம்ப், “அதற்குப் பதிலாக பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதிலும் ஐஎஸ்-ஸை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துவோம், செலுத்தப் போகிறோம்”, என்று அழுத்திக் கூறினார்.