மசீச‘அம்னோவின் எடுபிடி’:மகாதிர் சாடல்

dr mடாக்டர்   மகாதிர்  முகம்மட்டின்      எதிர்ப்புக்  கணைகள்  இப்போது  மசீசவை  நோக்கித்  திரும்பியுள்ளன.  முன்னாள்   பிரதமர்,    தம்முடன்         நட்பு   பாராட்டி  வரும்   டிஏபியைக்  குறை  சொல்லும்   மசீசவைக்  கடுமையாகச்   சாடினார்.

மசீச   மகாதிர்- டிஏபி  கூட்டணியைக்  குறைகூறுவதற்குமுன்   “திருடும்  போக்கைக்கொண்ட”  பிரதமர்  அப்துல்  ரசாக்குடன்   அது   ஒட்டி  உறவாடுவதைச்  சற்றே   எண்ணிப்பார்க்க   வேண்டும்    என  அவர்    தம்  வலைப்பதிவில்   கூறினார்.

“மசீசவுக்குக்    கொள்கைகள்  பற்றிப்  பேசும்  தகுதி  இல்லை;  அது   சந்தர்ப்பவாதி.   அது   டான்  செங்  லோக்கின்   மசீச   அல்ல.

“இப்போது   அது  நஜிப்பின்  இனவாத   அம்னோவின்   எடுபிடி,  அவ்வளவுதான்”,  என்றவர்   சாடினார்.