ரிக்டர் கருவில் 6.4 எனப் பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தைத் தாக்கியதில் குறைந்தது 25 பேர் பலியாகி இருக்கலாம் என அண்மைய தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறைந்தது 25 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் பிடை ஜெயா மாவட்டத் துணைத் தலைவர் சைட் முல்யாடி கூறினார்.
டஜன் கணக்கானவர்களுக்கு மருத்துவ மனைகளுக்கு வெளியில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுசிறு நில நடுக்கங்கள் தொடரலாம் என்பதால் காயமடைந்தவர்கள் மருத்துவ மனைகளுக்குள் செல்ல பயப்படுகிறார்கள் என்றாரவர்.
கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாக ஆச்சே தேடல், மீட்பு நிறுவனத் தலைவர் சுயிட்னோ தெரிவித்தார். கட்டிடத்தின் இடிந்த பகுதிகளை அகற்றுவற்குக் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
























