உலகளவில் எண்ணெய் விலை குறைந்திருப்பது போன்ற புறக் காரணங்கள்தான் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வருவதற்குக் காரணம் என்று கூறப்படுவதை மலேசியாவின் பிரபலமான பொருளாதார நிபுணர் ஜோமோ கே. சுந்தரம் மறுக்கிறார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரிங்கிட் மதிப்பு படிப்படியாக சரிவு கண்டு வந்துள்ளது.
“இதற்குக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மட்டும்தான் காரணம் என்று சொல்லிட முடியாது.
“வேறு காரணக்கூறுகளும் உண்டு. 1எம்டிபி தொடர்பாக புதுப் புது தகவல்கள் வெளிவர வெளிவர அரசாங்கம் மீது நம்பிக்கை குறைந்து வருவதும் ஒரு காரணம்”. ஜோமோ இவ்வாறு கூறியதாக தி எட்ஜ் நாளேடு அறிவித்துள்ளது.
அம்னோ நாதாரிகளின் ஊழல் பொருளாதார திறமையின்மை வேண்டப்பட்டவங்களுக்கு அள்ளி கொடுத்தது நாட்டின் மக்களுக்கு நல்லது செய்யாமல் தானே தின்னு தீர்த்தத்தினால் ரிங்கிட் 70 களிலேயே சரியத்தொடங்கி விட்டது ஆனால் இப்போது இந்தோனேசியா அளவுக்கு-இன்னும் சில காலத்தில் ஜப்பானிய வாழை மாற தாள்கள் போல் ஆகி விடும்/