ஆகோங் பதவியேற்புச் சடங்குக்கு மகாதிர் அழைக்கப்பட வேண்டும்: பெர்சத்து இளைஞர்கள் கோரிக்கை

syadஅடுத்த    பேரரசரின்   பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க  முன்னாள்   பிரதமர்   டாக்டர்    மகாதிருக்கு    அனுப்பப்பட்ட    அழைப்பு   திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது உண்மையானால்  அது   வருந்தத்தக்கது  என    பார்டி  பிரிபூமி  மலேசியா   (பெர்சத்து)  இளைஞர்   பிரிவு  கூறுகிறது.

மகாதிர்   அம்னோவிலிருந்து   வெளியேறி  விட்டாலும்,  மலேசியாவை  உலகளவில்   பிரபலமடையச்   செய்த    முன்னாள்   பிரதமரான     அவர்  இன்னமும்   ஓர்  அரசியல்   மேதைதான்  என   அப்பிரிவின்   தலைவர்    சைட்   சாதிக்   அப்துல்  ரஹ்மான்   கூறினார்.

மலாய்  இனத்தின்   முன்னேற்றத்துக்காக   தம்  சக்தியையும்  நேரத்தையும்    அர்ப்பணித்தவர்   முன்னாள்   பிரதமர்    என்பதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

“அதற்குக்   கைமாறாகக்  கிடைத்தது    என்ன? அவமதிக்கப்படுகிறார்,  இகழப்படுகிறார்.  ஓர்   அதிகாரப்பூர்வ   நிகழ்வில்   இருக்கைகூட   மறுக்கப்படுகின்றது.

“ஒரு  முன்னாள்  பிரதமருக்குக்  கொடுக்கப்படும்   மரியாதை   இதுதானா?”,  என்று  சைட்   சாதிக்   ஓர்     அறிக்கையில்  வினவினார்.

மகாதிர்   பிரதமராக   இருந்தபோது    தெங்கு   அப்துல்  ரசாலி,   உசேன்  ஓன்,  துங்கு  அப்துல்   ரஹ்மான்  போன்றோருடன்   கருத்து   வேறுபாடு   கொண்டிருந்தாலும்  அவர்களுக்கு  மரியாதை   கொடுக்கத்   தவறியதில்லை   என்றாரவர்.