டிவி 3மீது பெர்சே வழக்கு தொடுக்கும்

bersihதன்னை   அவமதிக்கும்   வகையில்,    அமெரிக்கக்   கோடீஸ்வரரிடமிருந்து     ரிம3.2 பில்லியன்  பெற்றதாக  செய்தி  வெளியிட்ட  டிவி3  மீது    பெர்சே   வழக்கு  தொடுக்க  முடிவு  செய்துள்ளது.

“சொன்னதைத்  திரும்பப்  பெற்றுக்  கோண்டு   மன்னிப்பு   கேட்கும்படி    கோரிக்கை  கடிதம்   அனுப்பினோம். அது  மறுத்து   விட்டது,  அதனால்  இப்போது   சட்ட   நடவடிக்கை  எடுக்கப்  போகிறோம்”,  என  பெர்சே   தலைவர்  மரியா   சின்   இன்று   கோலாலும்பூரில்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

நவம்பர்   19  பெர்சே  பேரணிக்கு  ஒரு  வாரம்  முன்னதாக,    அந்த   அமைப்பு   சோரோஸிடமிருந்து   ரிம3.2  பில்லியன்   நிதியுதவி   பெற்றிருப்பதாக    டிவி3   அதன்  செய்தி   அறிக்கையில்    குறிப்பிட்டது.  அத்தகவல்   எங்கிருந்து  கிடைத்தது   என்பதை   அது  குறிப்பிடவில்லை.

அவ்விவகாரம்  குறித்து   பெர்சேயின்   கருத்தைக்  கேட்டறியவும்    அது  முற்படவில்லை   என்று  மரியா  கூறினார்.