அரசியல் கட்சிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு சுயமாக நிதி தேடிக்கொள்வதற்கு வசதியாக தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் முன்மொழிந்திருக்கிறார்.
அதற்கு அனுமதிக்கப்பட்டால் கட்சிகள் அரசியல் நன்கொடைகளை நாட வேண்டிய அவசியமிருக்காது.
“ஒரு கட்சியின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனத்துக்கு வரிவிலக்குக் கோரும் உரிமையும் வழங்கப்பட வேண்டும்.
“வருமான வரியே அவற்றுக்கு விதிக்கக் கூடாது அல்லது பெயருக்கு 10 விழுக்காடு வரி விதிக்கலாம்”, என்றாரவர்.
பாஸ் மற்றும் அரசியல் நிதியளிப்பு மீதான தேசிய அலோசனைக் குழு ஆகியவற்றுடன் கூட்டாக நடத்திய கூட்டமொன்றில் காடிர் இப் பரிந்துரையை முன்வைத்தார்.
எப்படித்தான் இவனுங்களுக்கு மூளை இப்படி வேலை செய்கிறதோ…. கடவுளே …..
இதன் வழி முழுமையாக கொள்ளை அடிக்கலாம்.