பெர்லிஸ் சட்டமன்றம் இயற்றியுள்ள சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்றச் சட்டத்திற்கு எதிராக அதன் சட்டமன்ற உறுப்பினர் கா ஹோக் கோங் வாக்களிக்காததற்காக மசீச வருத்தம் தெரிவித்துள்ளது.
அச்சட்டமன்ற உறுப்பினர் அச்சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்காமல் போனதற்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மசீச மத்தியக்குழுவுக்கு விளக்கம் அளிப்பதற்காக மசீச தலைவர் லியோ திங் அவரை அழைத்துள்ளார் என்று மசீசவின் துணைத் தலைவர் வீ காசி யோங் அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
நேற்று பெர்லிஸ் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அச்சட்டத் திருத்தத்தினால் மசீச மிகுந்த ஏமாற்றமும் அச்சமும் அடைந்துள்ளது என்று வீ மேலும் கூறினார்.
இச்சட்டத் திருத்தம் மலேசிய அரசமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மண மற்றம் மண விலக்கு (திருத்தம்) மசோதா 2016 ஆகிய இரண்டுக்கும் முரணானது என்றாரவர்.
பெற்றோர்கள் இருவரும் சம்மதித்தால் மட்டுமே ஒரு குழந்தை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்படலாம் என்பது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தின் சாரம் என்று தெரிவித்த வீ கா சியோங், இது மசீசவின் உறுதியான நிலைப்பாடு; இதில் விட்டுக்கொடுப்பதற்கு இடமே இல்லை; இது அமைச்சரவையில் எழுப்பப்பட்டுள்ளது; ஒரு குழந்தையின் சமயத்தை இரு பெற்றோர்களும் (ibubaba) தீர்மானிக்க வேண்டும் என்பது 1970 லிருந்து பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்றாரவர்.
நல்ல நாடகம்!
பெர்லிஸ் மாநிலத்தில் இன்னும் பாரிசான் அரசாங்கம் தான். எனவே, உங்களால் பாரிசான் தலைமத்துவத்தை சாட முடியுமா? அல்லது வரும் பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு சீனர்களின் குறிப்பாக ம.சீ.ச வின் ஆதரவு இல்லை என் கூறத்தான் தைரியம் உண்டா? இதே சவால் தான் நம்ம ம.இ.கா வுக்கும்..
MCA – எல்லாம் எலும்பு துண்டு காட்சிகள்.