பக்கத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்க விரும்புகிறதா, இல்லையா? ஆண்டு இறுதிக்குள் பாஸ் முடிவைத் தெரிவிக்க வேண்டும்

amanahபாஸ்  14வது   பொதுத்    தேர்தலில்      பக்கத்தான்  ஹராபானுடன்   ஒத்துழைக்கப்  போகிறதா   இல்லையா  என்பதை      தெள்ளத்    தெளிவாக   தெரிவிக்க    வேண்டும்   என  பார்டி   அமனா  நெகரா   விரும்புகிறது.

“பாஸ்  2016  இறுதிக்குள்   அதன்  முடிவைத்     தெரிவிக்க   வேண்டும்    என்று  பக்கத்தான்    ஹராபான்   ஒரு  கெடுவை  நிர்ணயிக்க   வேண்டும். அப்போதுதான்      நம்முடன்   இருப்பவர்  யார்      எதிர்ப்பவர்   யார்  என்பதை    தெளிவாக   தெரிந்து   கொள்ள  முடியும்”,  என   அமனா   உதவித்    தலைவர்   முஜாஹிட்   யூசுப்  ராவா   கூறினார்.

“அவர்கள்   நம்முடன்  ஒத்துழைக்கவில்லை   என்றால்    அவர்கள்  பிஎன்னுடன்  இருப்பதாகக்  கருதிக்கொள்ள   வேண்டியதுதான்.

“நடுநிலை   என்பது   பக்கத்தானுக்கு   நன்மையாக   இராது,  அது  பின்னுக்குத்தான்   சாதகமாக   அமையும்”,  என   அந்த  பாரிட்   புந்தார்   எம்பி   கூறினார்.