மகனைப் பிரதமராக்கத்தான் மகாதிர் டிஏபியுடன் குலாவுகிறார்: அம்னோ இளைஞர் தலைவர் குற்றச்சாட்டு

khairulடாக்டர்    மகாதிர்   முகம்மட்   அம்னோவில்   இருந்துகொண்டு    தம்   புதல்வர்   முக்ரிஸைப்  பிரதமராக்க   முயன்று   தோல்வி  கண்டதால்   இப்போது   டிஏபியின்   அரவணைப்பில்   அதைச்   சாதிக்க   எண்ணுகிறார்   என   அம்னோ  இளைஞர்   தலைவர்   ஒருவர்   குற்றம்   சாட்டியுள்ளார்.

டிஏபியும்   அவருக்கு  உதவ  மறுத்தால்    அங்கும்   பூகம்பம்  வெடிக்கும்     என   கைருல்  அஸ்வான்  ஹருன்   கூறினார்.

முக்ரிஸ்   தொடர்பில்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்குக்குக்  கடும்   நெருக்குதல்   கொடுத்து  வந்தார்  மகாதிர்.   நஜிப்   அதற்குப்  பணியவில்லை   என்பதால்   பிரதமரையே  கவிழ்க்கத்     திட்டமிட்டார்.

“அந்த  முயற்சியும்  முறியடிக்கப்பட்டது.  அம்னோ  தலைவர்களும்   அடிநிலை   உருப்பினர்களும்   மகாதிரின்  அரசியல்    திட்டத்தை   நிராகரித்து  மக்களின்   நலனுக்கும்   அம்னோவின்    நலனுக்கும்   முன்னுரிமை   அளித்தனர்.

“தம்  நோக்கம்   நிறைவேற   அம்னோவைப்  பயன்படுத்திக்கொள்வதில்   தோல்வி    கண்ட   மகாதிர்   டிஏபியுடன்   கூட்டுச்   சேர்வது    உள்பட,   எதையும்   செய்யத்   தயாராகி  விட்டார்”,   என்று   புதிதாக    செனட்டராக்கப்பட்ட  கைருல்    ஓர்    அறிக்கையில்   கூறினார்.