நூர் ஜஸ்லான்: மற்ற கைதிகள்போலவே மரியாவும் நடத்தப்பட்டார்

maria பெர்சே   தலைவர்   மரியா  தடுப்புக்  காவலில்    இருந்தபோது   தடுப்புக்  காவலில்    உள்ளவர்கள்   எப்படி   நடத்தப்படுவார்களோ   அப்படித்தான்   அவரும்   நடத்தப்பட்டார்   என   உள்துறை  துணை   அமைச்சர்    நூர்  ஜஸ்லான்  முகம்மட்   கூறினார்.

“வழக்கமான    நடைமுறைகளின்படிதான்    நடத்தப்பட்டார்.  அவர்  வேறு  மாதிரி    நடத்தப்படவில்லை”,  என்றவர்  கூறியதாக   பிரி  மலேசியா  டூடே)எப்எம்டி)  செய்தி   குறிப்பிடுகிறது.

“தடுப்புக்  காவல்   அனுபவம்   குறித்து   பேச    அவர்  விரும்பினால்  தாராளமாக   பேசட்டும்”,  என்று  நூர்  ஜஸ்லான்    கூறினார்.

தடுப்புக்  காவலில்  இருந்தது  பற்றிக்   கேட்டதற்கு     அதை  ஒரு      “சோதனைக்  காலம்”  என்று  மரியா   வருணித்திருந்தார். ஒவ்வொரு   நாளும்  ஆறிலிருந்து   எட்டு  மணி  நேரம்   போலீசார்   அவரை  விசாரித்தார்களாம்.