பெர்லிசின் ஒருதலைப்பட்ச மத மாற்றச் சட்டத்திற்கு மஇகா கண்டனம்

dr subraபெர்லிஸ்  மாநில    அரசு   மதமாறிய   பெற்றோரில்   ஒருவர்    மதமாறாத   மற்றொரு  பெற்றோரின்   அனுமதியின்றி    பிள்ளைகளை  ஒருதலைப்பட்சமாக     இஸ்லாத்துக்கு  மதமாற்றுவதற்கு   வகை   செய்யும்   சட்டத்திருத்தத்தைக்  கொண்டு    வந்திருப்பதை   மஇகா    சாடியுள்ளது.

இந்த  விவகாரம்தான்   இந்திரா  காந்தி   வழக்கு  உள்பட   பல   வழக்குகளில்   பெரும்  பிரச்னையாக   உள்ளது    எனக்  கட்சித்   தலைவர்   டாக்டர்  எஸ். சுப்ரமணியம்   கூறினார்.

“இந்நாட்டில்   சமயங்களுக்கிடையில்     முள்ளாய்  உறுத்திக்  கொண்டிருக்கும்
இவ்விவகாரத்துக்கு   நிரந்தரத்   தீர்வு   காண   மத்திய  அமைச்சரவை   முயன்று   வரும்   வேளையில்   பிஎன்   அரசு  ஒன்றின்   இச்செயல்    சமய   இணக்கத்துக்கு   ஏற்பட்டுள்ள   மிகப்  பெரிய  பின்னடைவு.

“இது  மலேசிய  மக்களிடையே  மேலும்  ஒற்றுமையின்மையைதான்    கொண்டு  வரும்”,  என்று   அவர்  ஓர்   அறிக்கையில்    கூறினார்.